Tuesday 16 December 2014

திருவெம்பாவை 27 டிசம்பர் ஆரம்பம்

                           மார்கழியின் சிறப்பு

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.பெரியதம்பிரான் ஆலயத்தில் மார்கழி முழுவதும் அதிகாலை ஐந்து மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் படிக்கப்படும்   திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும்சங்கு ஊதிக்கொண்டும் பாரதி கலை மன்றத்தினால் நகர்வு சங்கீர்த்தனம் மேற்கொள்வது வழமை . . விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும்திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின்திருப்பாவை பாடுவார்கள். [1][2]. இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். [3]