Thursday, 17 October 2019


Sunday, 22 September 2019

     அமரர் கிருஷ்ணர் சிவசிதம்பரம் 

 பாரதி கலை மன்றம் 1982 இல் ஸ்தாபிக்கப் பெற்ற போது, அமரர் அவர்கள் 50 வயதினைக் கடந்திருந்த போதிலும் அன்றைய துடிப்பான இளைஞர் கூட்டத்தினருடன் தானும் '"இளைய தளபதியாய் " இணைந்து அவர்களினை போஷிக்கும் போஷகரானார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறிவலராக சிறந்த பணியாற்றினார். எனினும் 

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க கிராமமே மேன்மை எனக் கருதி  விவசாயத்தினை தனது சீவனோபாய தொழிலாக முன்னிறுத்தினார்  பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த 70 களில் தளராது  விவசாயத்தினை சவாலாக கையிலெடுத்து பல்வேறு சாதனைகளை படைத்துக் காட்டினார். 'மிசின் மாமா' என சிறார்கள் செல்லமாக அழைக்குமளவிற்கு பிரபலம் பெற்றிருந்தார்.நீல நிற  Ford Dexta உழவுஇயந்திரத்தில் 70 களில் 80 களில் கிராமத்து குச்சொழுங்கைகளில் வலம்வந்தது என்றும் மறப்பதற்கில்லை. விவசாயத்துடன் தனது பல்வேறு கலைத் திறன்களூடாக கைப் பணியை வலிதாக சிரமேல் கொண்டு காண்போரைக் கவரக் கூடிய கைவினைப் பொருட்களை சிருஷ்டித்தார் . போராட்ட காலங்களிலும் சரி அதற்கு முன்பாகவும் ,பின்பாகவும் கலைப் படைப்புகள் பலவற்றை பாரதி கலை மன்றத்திற்கென வடிவமைத்தார்..சமகால நிகழ்வுகளை சிறப்பாக வெளிக்கொணரும் வகையிலான பல படைப்புகளை அர்பணித்திருந்தார் . கால மாற்றங்களினூடாக அவற்றில் பல எம்மிடையே இல்லாதிருந்தாலும் அவற்றை பார்த்தவர்களின் பசுமையான நினைவுகள் இன்றும் எம்முன்னே பசுமரத்தாணி போல் நிழலாடுகின்றன.  விக்ரோரியாக் கல்லூரி என்றாலென்ன ஐக்கிய சங்க வித்தியாசாலையாக இருந்தாலென்ன அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் அன்னாரது பங்கு பணிஇருந்திருக்கும். சாரணர் இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தேவையேற்படும் வேளைகளில் எல்லாம் இவர் தனது முத்திரையை பொறிக்காத இடமில்லையெனலாம். பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது , போட்டி தொடக்குநராக கம்பீரமாக காட்சி தருவார். விளையாட்டு நிகழ்வுகளை பயிற்றுவிப்பதிலும் கைதேர்ந்தவர் எனலாம். இன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அன்று பெற்றார் - ஆசிரியர்  சங்கமாக செயற்பட்ட வேளையிலும் அவர் தனது ஆர்வத்தினை அதன் மீதும் கொண்டிருந்தார்.

  வீட்டினை மாதிரி வீட்டுத் தோட்டமாக எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு பல்வேறு திட்டங்கள் போடுவதனுடன் செயற்படுத்திக் காட்டியும் வீட்டுத் தோட்டபோட்டிகளில் பங்கு பற்றியும் வெற்றி பெற்றார் 
ஆலய நிகழ்வுகளின்போது தவறாது சமூகம் தந்து இறையருளை வேண்டுவதுடன் தன்னாலியன்ற சரியை தொண்டுகளையும் ஆற்றுவார். கூட்டு பிரார்தனைகளிலும்,பஜனை படிப்பதிலும்  தனது மெய்யுருகி தனது குரல் வெளிப்படுத்துவார். பைரவ பக்தனாக , முருக பக்தனாக, விநாயக பக்தனாக , அம்பிகை பக்தனாக, கிருஷ்ணபக்தனாக பல வேறு வடிவங்களிலும் அவரை நாம் பார்த்திருக்கின்றோம். அண்மைய காலங்களில் அவர் காவி உடை தரித்தே தனது துறவற நிலையை வெளிப்படுத்தி வந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் மிக நிதானமாக தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டார் . தியானப் பயிற்சி ,மூச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி போன்றவற்றிலும் தான் பெற்ற பயனை ஏனையோரும் பெறவேண்டும் என்பதிலும் கவனத்தை செலுத்தினார். அவர் தனது சாதாரண இருக்கையை பத்மாசனமாகவே கடைக்கொள்வார். பொன்னாலை கிருஷ்ண பக்தனாக நாமம் தரித்த அவரது பரந்த நெற்றி என்றும் எம் மனக்கண் முன்னே வரும். எத்தனையோ வாகனங்களை செலுத்தும் திறமை அவரிடம் இருந்தபோதிலும் மிக எளிமையாக துவிச்சக்கர வண்டியிலேயே பல மைல் தூரம் வலம் வந்தார்.இன்று வான் வெளியில் வலம் வருகின்றார் ,


(புகைப்பட அனுசரணை: திரு.சி.முகுந்தன்)

Wednesday, 24 July 2019

Monday, 1 April 2019

இப்படியும் நடக்கலாம் ......ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..
#சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே
#தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு #சீட்டாடவும்பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
#பொய்_சொல்லவும்#திருடவும்_ஆரம்பித்தான்.
இறுதியில் #கொலைகாரனாகவும்_ஆனான்...
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல் கோர்ட் என வழக்கு நடந்து,
இறுதியாக...
#தூக்கு_தண்டனை_விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது...
தூக்கிற்கு முன்தினம் #கடைசி_ஆசை_கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.
கதறினர்...
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்...
மகன் அமைதியாகச் சொன்னான். #அவர்கள்_காரணமில்லை...
#நீங்கள்தான், நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது..
#ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.
வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....
#அடித்து_மிரட்டி... போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் .....
#தூக்கு_மேடை_வரை_வந்திருக்கிறது!
“எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்...
ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.
இதை பெற்றோர் உணரவேண்டும்.
பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.

Saturday, 30 March 2019

பாரதி கலை மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

   பாரதி கலை மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 31/3/2019, ஞாயிறு  பி.ப. 4:00 மணிக்கு மன்றத் தலைவர் சூரியபிரகாஸ் அவர்கள் தலைமையில் மன்ற மேல் தளத்தில் நடைபெறும். மன்ற உறுப்பினர்கள் , மன்ற நலன் விரும்பிகள் அனைவரும் குறித்த நேரத்திற்கு சமூகம் தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். அதேவேளை புலம்பெயர் மன்ற நலன்விரும்பிகள் அனைவரையும் தார்மீக ஒத்துழைப்பினை நல்குமாறும் வேண்டுகின்றோம்.

Friday, 15 March 2019

மரண அறிவித்தல் - இராசரத்தினம் வள்ளிநாயகி

                           மரண அறிவித்தல்


                வள்ளிநாயகி இராசரத்தினம்
                   

          1946 < ———————————-> 2019


    சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் வள்ளிநாயகி அவர்கள் 15/03/2019 , வெள்ளியன்று காலமானார்.

                          அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் கந்தையா இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜெயரஞ்சன்(பிரான்ஸ்) , சுதாகரன் ஜெயரஞ்சனி (முன்னாள் பாரதி முன்பள்ளி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற இராமச்சந்திரா சுதாகரன் அவர்களின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற ஞானேஸ்வரி சிதம்பரப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை சபாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் யோகப்பரியன்(பிரான்ஸ்) சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களான மோகனப்பிரியா, கஜப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னாச்சிப்பிள்ளை, சுப்பையா பொன்னு ஆகியோரின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா- தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகளும், கணபதிப்பிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரத்தினம் மற்றும் சொர்ணலட்சுமி, இராசலட்சுமி, அன்னலட்சுமி, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற நடராசா, பூமாதேவி, வேதவனம் , கமலாதேவி , வரதராசா , பத்மநாதன் , தில்லையம்பலம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.
                                 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/03/2019 ஞாயிறு முற்பகல் 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 
        இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
                                                                                                      தகவல் :-
“பிரிய வாசா”                                                        குடும்பத்தினர்                 
        0212051747                                                                                                       சுழிபுரம் மேற்கு                                                                                                                                                                                                                                  
                                                                                                                                                                                                                                                                                                                                                         

Friday, 1 March 2019

மரண அறிவித்தல் - சின்னத்துரை சரவணபவானந்தன்

சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும் கனடா,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சரவணபவானந்தன் அவர்கள் பிரான்சில் காலமானார். அன்னார் சுழிபுரம் மேற்கை சேர்ந்த சின்னத்துரை தம்பதியினரின் புதல்வனும்,சுன்னாகதினை சேர்ந்த சின்னதுரை தம்பதியினரின் மருமகனும், ராஜேஸ்வரியின் (கனடா) கணவரும்,  பாலினி சாம்சன் (கனடா),  குமரன் (கனடா), பபியா சுபா (கனடா)  ஆகியோரின் தந்தையும் கேசவன்(கனடா)  ,மலர்மாது(பிரான்ஸ்), மீனலோசினி (இலங்கை)  ,விக்னேஸ்வரன்(பிரான்ஸ்),  விக்னேஸ்வரி(பிரான்ஸ்), சமூக ஆர்வலர்  கெங்காதரன் (பிரான்ஸ்), லிங்கம்(கனடா),  பரமேஸ்வரி (இலங்கை)  ஆகியோரின் சகோதரரும் பாரதி கலை மன்ற முன்னாள் தலைவரும் பொருளாளருமாகிய சிவசண்முகநாதன் அவர்களின் மைத்துனரும் ஆவார்.. பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு பாரதி சமூகத்தினரின் அனுதாபங்களை பகிர்கின்றோம்.