Monday 24 November 2014

பெரியதம்பிரான் - தேர் ஒப்பந்த மாதிரி படிவம்

யாழ் / சுழிபுரம் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில்    (பெரியதம்பிரான்) சித்திர தேர் அமைப்பதற்கான                  
                                 ஒப்பந்தம்
வேலையிடுபவர் : ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன                      
                   சபையினர் 
நிர்மாணிப்பவர் :  கமலாலயம் கலைக் கூடம் ,சிற்ப கலா திலகம் விஸ்வ    பிரம்மஸ்ரீ குணபாலசிங்கம் சந்திரமோகன்  48/30 கண்டி வீதி, திருகோணமலை

       மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் 24 /11/2014  திகதியாகிய இன்றைய தினம் இரு பகுதியினரதும் பூரண சம்மதத்துடன் கையொப்பமிட்டு தேர் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றது. நிர்மாணிப்பவர் குறிப்பிட்ட சித்திர தேரினை இணைக்கப்பட்டுள்ள மாதிரி வரைபடத்தின் படியும் தரப்பட்ட அளவு பிரமாணங்களின் படியும் இன்றைய தினத்திலிருந்து பதின்நான்கு (14) மாத காலத்தில் அதாவது 24/01/2016 இற்கு முன்பாக பூர்த்தி செய்து தருவதாக ஒப்புக்கொள்கின்றார்.
     இதற்கான மொத்த கொடுப்பனவாகிய முப்பத்தேழு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவை (3750,000 /=) கீழ்காட்டப்படும் எட்டு கட்டங்களில் காட்டப்படுள்ள படிமுறை வேலைகளின்  பூர்த்தியின் போதும் குறிப்பிட்ட தினத்தில் கொடுப்பதற்கு இரு பகுதியினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
1.         ஆரம்ப கொடுப்பனவு திருப்பணி ஆரம்பத்தின் போது 24/11/2014 அன்று ஐந்து இலட்சம் ( ரூபா 500,000 /= )  
2.  2 ம் கட்ட கொடுப்பனவு கீழ்தள வேலைகளிற்கான மரங்கள்                   எடுத்துவரப்பட்டு 24/01/2015 இல் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது ஐந்து இலட்சம் ( 500,000/= )                                     3. .              3    ம் கட்ட கொடுப்பனவு கீழ்த்தள வேலைகள் பூர்த்தியாகி சிற்ப வேலைகள் விக்கிரகவரி, தூண்கள்,   வரலாற்றுச் சிற்பங்கள், பணிகள் ஆரம்பித்திருக்கும் போது  24/04/2015 இல்   ஐந்து இலட்சம்        (ரூபா 500,000 /=)
   4.                       4   ம் கட்ட கொடுப்பனவு  கீழ்த்தள பணிகள் பூர்த்தியாகி மேல்தள பணிகள் ஆரம்பிக்கப்படும்போது 24/07/2014  இல்; ( ரூபா 500,000 /= )
   5.           .         5  ம் கட்ட கொடுப்பனவு  ,தேரின் கீழ்த்தளப் பணிகளுடன் மேற்பகுதி 16 பவளக் கால்களும் சொக்கட்டான் முறையான பந்தல் வேலைப்பாடு ,64 பவளக்கால்கள் ,மேல் பொதிகை 3 தளங்களைக் கொண்ட எழுதகவரி ,  24 கர்ணகூடு , 72 கடைச்சல் கவசங்கள் , 8 யாழிகள் 64 பித்தளை மணிகள் போன்ற பணிகள் பூர்த்தியாகி இருக்கும்போது 24/12/2015 இல் ஐந்து இலட்சம்(ரூபா (500,000 /=)
 6.                   6 ம் கட்ட கொடுப்பனவு  4 சில்லுகளுடன் மீதி சகல பணிகளும் வர்ணப் பூச்சு வேலைகளும் நிறைவடைதலின் போது 24/01/2015 இல்                        ஐந்து இலட்சம்  ( ரூபா 500;000 /= )
 7.                  ஆலய முன்றலிற்கு தேர் கொண்டுவரப்பட்டு பொருத்தி நிறைவுற்றதும்  ரூபா இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ( ரூபா.250000/= )
 8.        2016 ம் ஆண்டு மகோற்சவம் தொடங்கியதும் புதிய சித்திர தேர் வெள்ளோட்டம் நடைபெற்று தேரின் திருப்திகர தன்மையை பொறுத்து பரிபாலன சபையினரின் சம்மதத்துடன் ரூபா ஐந்து இலட்சம்   ( ரூபா 500,000/= ).
                    மேற் கூறப்பட்ட சகல அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு எமது பூரண சம்மதத்துடன் இத்தால் ஒப்பமிடுகின்றோம் .
          பரிபாலன சபையின் சார்பில் :-                     நிர்மாணதாரர் :-
1.தலைவர்                                                                 
2.செயலாளர்

                                                                      3.பொருளாளர்                                                                    :