Sunday, 26 August 2018

பாரதி கலை மன்ற 36 வது ஆண்டு நிறைவு விழா 8 September 2018.

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 36 வது ஆண்டு நிறைவு விழா , “பாரம்பரியங்களைப் பேணி வளமாக வாழ்வோம்”  எனும் தொனிப் பொருளுடன், பாரதி கலை மன்ற பாரதி முன் பள்ளி வளாக சுப்பையா அரங்கில் எதிர்வரும் 8 sep 2018 அன்று பிற் பகல் 3:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. ஆண்டு விழாவினை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாமும்,இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளன. மன்றத் தலைவர் திரு.வி.சூரியப்பிரகாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பிரதம விருந்தினராக அகில இலங்கை இந்து மகா சபைத் தலைவரும்,தீவக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுமாகிய மருத்துவர் ப.நந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு.     .ரவி , ஆயுர்வேத வைத்தியர் திருமதி.    .ஸ்ரீப்பிரியா ,விக்டோரியாக் கல்லூரி உப - அதிபர் திரு .   .பாலமுருகன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
        வரவேற்பு நடனம் ,சிற்றுரைகள் , குழுப்பாடல் , நடன நிகழ்வுகள்,பட்டிமன்றம்,நாடகம்,இன்னிசை கானங்கள் ஆகிய கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.அத்துடன் "பாரதி"  கையெழுத்துச் சஞ்சிகை வெளியீடும் கல்வி சார் , விளையாட்டுத் துறை சார் திறமைகளை வெளிப்படுத்யோர்க்கான மதிப்பளித்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.