Tuesday 28 June 2016

பாரதி கலை மன்றத்தின் புதிய தோற்றம் 😀30 வருடக் கனவு நனவாகியது😀

 பாரதி கலை மன்றத்தின்  புதிய மேல் தளம் மன்றத்தின் 34 வது ஆண்டு விழா அன்று, 2 july 2016 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 

எமது பாரதி கலை மன்றமானது சமய  கலை கலாசார விளையாட்டு நடவடிக்கைகளில் மிக சிறப்பாக தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது ..எமது செயற்குழு உறுப்பினர்கள் அறநெறி வகுப்புகள்  நடன,,சங்கீத,organ மிருதங்க வகுப்புகள் போன்றவற்றை நடாத்தி வந்தனர்.. கலை விழாக்களின் போது ஒரே நேரத்தில் இசை நடன நாடக ஒத்திகைகள் பார்ப்பதிலும் பயிற்றுவிப்புகளிலும் பலத்த இட நெருக்கடியை எதிர் நோக்க வேண்டி இருந்தது .இதனை நிவர்த்திப்பதானால் 1985  இல் மன்றத்துக்கான கட்டடம் அமைக்கப் பெற்ற பொது மேல் தளம் அமைப்பதற்கேற்றவாறான அடித் தளமே இடப்பட் டிருந்தது.எனினும் அன்று போதிய நிதி வளமின்மையால் கீழ் தளம் மட்டுமே .நிர்மாணிக்கப் பெற்றது .
                                                                                         
இட நெருக்கடியை தீர்க்கவேண்டுமானால் மேல்த்தளத்தினை பூர்த்தி செய்வதே இக்காலத்தின் தேவையாக இருந்தது. மேல்தளத்தினை பூர்த்தி செய்யவேண்டுமானால் நிலம் கலைமன்றத்திற்
ரித்தானதாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆனால் நிலதிற்கான குத்தகை காலம் கடந்து வலிதற்றதான நிலையில் இருந்தமையால் முதலில் அதற்கான தீர்வு ஒன்றினை எட்டவேண்டியதாக இருந்தமையால் எமது செயற்குழுவினர் மன்ற நில உரிமையாளர்களாகிய திரு.திருமதி. உமாபதி தம்பதிகளுடன் புலம் பெயர் வாழ் எமது மன்ற நலன் விரும்பிகளின் அனுசரணையுடன் அணுகிய வேளையில் அவர்களின் சாதகமான பதிலுடன், 28/01/2015 அன்று, தைப்பூச நன்னாளில் உரித்தாளர்களினால் மன்றத்திற்கானதாக அறுதியளிக்கப்பட்டு அன்பளிக்கப்பட்டது.
அன்றைய தினத்திலேயே மேல்தளத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது புலம் பெயர்வாழ் மன்ற நலன்விரும்பிகள்- மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் 82 % பங்களிப்புடனும் மீதி 18 % உள்நாட்டு அன்பளிப்புடனும் மொத்தம் 18 இலட்சத்து 29 ஆயிரத்து 57 ரூபா எம்மால் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இதுவரையில் பூரத்திசெய்யப்பெற்ற வேலைகளிற்கு மீதமாக இன்னமும் சுமார் 2 1/2 இலட்சம் வரையில்  😌கடனாக செலுத்தப்படவேண்டியுள்ள நிலையில் எஞ்சியமேற்தளப் பணிகளையும் மேற்கு புற  கொட்டகையையும் அமைப்பதானால் அதற்கும் சுமார் 3 இலட்சம் வரையிலுமாக ஆக மொத்தம்  1/2 இலட்ச ரூபா தேவைப்படுகின்றது.
கடனாக செலுத்த வேண்டி உள்ள தொகையையும் ,எஞ்சிய பணிகளையும் பூர்த்தி செய்வதற்கு இது வரையில் எமக்கு உதவி புரிந்த அன்புள்ளங்கள் போன்று ஏனைய நலன்விரும்ப்பிகளும் உதவுவார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

நன்றி 
தொகுப்பு : திரு.த.விமல் 
(முன்னாள் தலைவர்  )
பாரதி கலை மன்றம்