Wednesday 14 January 2015

கலைமன்ற அமைவிட நன்கொடை

           பாரதி கலை மன்ற அமைவிடக் காணியினை கலை மன்றத்திற்கு உரித்துடயதாக கையளிக்கும் நிகழ்வு 25 டிசம்பர் 2014 அன்று முற்பகல் 10;30 மணியளவில் கலை மன்றத்தில் நடைபெற்றது.


                  மன்றத் தலைவர் திரு.த.விமல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காணி நன்கொடயாளர்களாகிய திரு.திருமதி.உமாபதி-  ஞானேஸ்வரி தம்பதியினருடன் அவர்களின் வழித்தோன்றல்களும்-உறவினர்களும், பாரதி கலை மன்ற செயற்குழுவினருடன் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


                                                                                                                                                                                                                                                                         காணி கையளிப்பிற்கான உறுதிப்பத்திரத்தை தொல்புரம் சட்டத்தரணி  செல்வி .சாருஜா சிவனேசன் அவர்கள் தயாரித்து கொடையளித்தவர்களினதும், கலை மன்ற செயற்குழுவினரதும் ஒப்பங்களைப் பெற்று ஆவண ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார் 



                                    நிகழ்வின் போது நன்கொடையாளர்கள் சார்பில் உரையாற்றிய  மன்ற போஷகரான எந்திரி.வி.உமாபதி J.P அவர்கள் தனது உரையில் 1984-1985 காலப்பகுதியில் குத்தகை அடிப்படையில் காணியை கையளிக்கும் போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு   கூர்ந்தார்.     அமரர்   ச .சற்குணராஜா அவர்கள் காணி பெறுவதற்கு மேற்கொண்ட அன்றைய  காலம் முதல் இன்றைய காலம் வரை நம்மிடையே இல்லாது  போனவர்களையும் நினைவு     கூர்ந்தார். 

      அமைவிடக் காணி தொடர்பான ஆவணங்கள் நன்கொடயாளர்களினால் மன்ற நடப்பு செயட்குழுவினரிடம் கையளிக்கப்பட்டது







இதேவேளை மன்ற மேல்தள நிர்மாணிப்பிற்கென ரூபா
2  இலட்சத்திற்கான காசோலையும் நன்கொடயாளர்களினால் மன்ற பொருளாளர் திருமதி.சு.துஷ்யந்தினி அவர்களிடம் கையளிக்கப்பட்டது    

                                                                                                                                                       
             மன்றத்தலைவர் தனது உரையின் போது மன்ற  ஸ்தாபிதம் முதல் இற்றை வரைக்கும் மன்றம் இயங்கிய அமைவிடங்கள்  தொடர்பான தகவல்களை உள்ளடக்கியதுடன்  எதிர் காலத்தில் மேல் தள நிர்மாணிப்பு பணிகள்  ஆரம்பிக்க இருப்பது பற்றியும் குறிப்பிட்டார்.

     மன்றத்தில் நூல்களை பேணுவதற்கான புத்தக உருக்கு அலுமாரியினை எமது நலன் விரும்பியும் சிங்கப்பூரிலிருந்து புலத்திற்கு வருகை தந்திருந்த திரு.உ.சயந்தன் அவர்கள் கையளித்தார்  

                                                                          மன்ற கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.