Monday 1 October 2018

உலக சிறுவர் - முதியோர் தினம் - Oct 1



சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னுரிமையினை வழங்கவேண்டியது அனைவரினதும் கடமையாகும்.இதற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உலகம் பூராகவும் சிறுவர் தினம் முதன்முறையாக கொண்டாடப்பட்டது 1955 ஒக்டோபர் 1 ஆம் திகதியாகும். 
            இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.அதற்கமைவாக எமது பாரதி சமூகத்தினர் பாரதி முன் பள்ளி சமூகத்தினருடன் இணைத்து சர்வதேச சிறுவர் - முதியோர்  தினத்தினை வருடம்தோறும்  கொண்டாடி வருகின்றோம். இன்று Oct 1, திங்கள், பி.ப. 3:30 மணிக்கு பாரதி கலை மன்ற முன்றலில் இருந்து பாரதி முன்பள்ளி சிறார்கள் அணிவகுப்பாக பெரிய தம்பிரான் கோவிலிற்கு அழைத்துவரப்பட்டு , அங்கு அவர்களிற்கான அருளாசி வளங்கப்ப்பெற்று , பாரதி முன்பள்ளி வளாக "சுப்பையா அரங்கில்" சிறுவர் தின நிகழ்வுகள் பெற்றார் சங்கத் தலைவர் திரு.பொ.சுதாகரன் அவர்கள் தலைமையில் நடைபெறும். முதியோர் தின கெளரவிப்பு பெறுவதற்காக பாரதி சமூக முதியோர் திருமதி.நவரத்தினம் மங்கயறஂகரசி அவர்கள் அழைக்கப்பெற்றுள்ளார்.விருந்தினராக முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.ர.சத்தியருபி அவர்கள் கலந்துகொள்வார். செல்வி.சு.அஸ்விகா, செல்வன் சு.பிரவீன் ஆகியோரின் சிற்றுரைகளும் இடம்பெறும்.  பாரதி சமூகத்தினரின் சிறுவர்-முதியோர் தின அனுசரணையினை எமது புலம்பெயர் உறவாகிய திரு.சுப்பையா பத்மநாதன் குடும்பத்தினர் வருடா வருடம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

UNICEF இனால் அறிவிக்கப்பட்ட உலக சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
            

  1. ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள சிறுவர்களில் 16 000 பேர் மரணிக்கின்றனர்
  2. உலக சனத்தொகையில் 35 மில்லியன் பேர் HIV தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். அதில் 2 மில்லியன் பேர் 10-19 வயதிற்குட்பட்டோர் அதில் 56% பெண் பிள்ளைகளாவர்
  3. உலக சனத்தொகையில் பெண்களில் 1/3 பேர் 20-24 வயதிற்குட்பட்டோர் திருமணமானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
  4. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. உலகம் பூராகவும் உள்ள குழந்தைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பிற்கு 50% காரணம் மந்த போசணையாகும்.
UNICEF இன் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனங்கள் 


சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கா பிரகடனப்படுத்தப்பட்ட விசேட உடன்படிக்கைகள் 

  1. 1924 இல் சிறுவர் உரிமை தொடர்பான உடன்படிக்கை
  2. 1959 இல் சிறுவர் உரிமை தொடர்பான அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  3. மனித உரிமைகள் தொடர்பான விசேட உடன்படிக்கை
  4. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச       உடன்படிக்கை