Thursday 10 August 2017

35வது ஆண்டு நிறைவு விழா கலைஞர்கள் புலம்பெயர் உறவுகள் ஒன்று கூடல்


  35 வது ஆண்டு நிறைவு விழாவிற்காக வருகை தந்திருந்த புலம்பெயர் பாரதி சமூக உறவுகளிற்கும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த கலைஞர்களிற்குமிடைபேயான ஒன்றுகூடல் 9 Aug 2017 அன்று மாலை வேளையில் சுப்பையா அரங்க முன்றலில் நடைபெற்றது.
      
U

கலை மன்றத் தலைவர் திரு.வி.உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புலம்பெயர் உறவுகளின் சார்பில் கருத்துரைத்த ,ஐக்கிய இராச்சிய இலாங்கிலி தமிழ் பாடசாலை நிர்வாகியும், 1992 இல் நடைபெற்ற மன்ற 10 வது ஆண்டு நிறைவு விழாவில் மேடையேற்றப்பட்ட 'பாஞ்சாலி சபதம்' சரித்திர நாடகத்தில் திருதராட்டினர் பாத்திரமேற்று நடித்தவருமான திரு. விசுவநாதன் ஜெயக்குமார் அவர்கள் தூயதமிழ் மொழிப் பிரயோகத்தின் அவசியம் பற்றியும் வயலின் இசைத்த கலைஞர் சித்தன்கேணியூர் திரு.நகுலேஸ்வரன் குலதீபன் அவர்கள் யாழ் மருத்துவ பீட் 3 ம் வருட மாணவனாக இருந்நபோதிலும் தனது கல்வியுடன கலைத்துறையில் அவர் காட்டும் ஈடுபாட்டையும் பாராட்டினார். இதுபோன்ற உறவுகளின சங்கமத்தை ஏற்படுத்துவதனூடாக மன்றம் வளர்ச்சி பெறும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து 35 வது ஆண்டு விழாவின் போது மேடையேற்றப்பட்ட 'தொடர்பாடல்' சமூக நாடகத்தினை நெறியாள்கை செய்த கலாவித்தகர் பொன்னாலையூர் திரு.பா.பகீர்பரன் ஆசிரியரின் கருத்துரையும் இடம்பெற்றது.அடுத்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருந்த மன்ற முன்னாள் தலைவர் சி. முகுந்தன் அவர்கள் தனது கருத்தைத் தெரிவிக்கும் போது காலத்திற்கு காலம் இவ்வாறான சங்கம நிகழ்வினை நடாத்தவேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். தேசிய மட்டத்தில் 2 ம் இடத்தினை பெற்றுக்கொண்ட 'இலக்கிய விமர்சன' போட்டியில் 2 ம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட விக்ரோறியாக் கல்லூரி உயர்தர மாணவி செல்வி.சி.பிரவீணாவின் உரையும் மன்ற இந்து விவகாரத்துறைப் பொறுப்பாளரின் அறநெறிக் கல்வியில் மாணவ கலைஞர்களின் பங்குபற்றலின் அவசியம் பற்றியதான உரையும்  நடன ஆசிரியர ஶ்ரீதேவி கண்ணதாசன் அவர்கள் மாகாண கல்வித் திணைக்கள நடன ஆசிரிய ஆலோசகராக பதவி உயர்வு பெற்றமையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கலும் இடம்பெற்றன.

நிறைவாக மன்ற பொருளாளர் திரு.பி.சுபராஜ்   அவர்களின் நன்றியுரையுடன் ஓன்று கூடலும்
விருந்துபசாரமும் நிறைவுபெற்றது.