Wednesday 19 February 2014

OSA (UK) helping feeding school students to get over 70 marks in Yr 5 Scholarship Exam.

18/02/2014 அன்று ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தேறி உள்ளன .
ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுழிபுரம் கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபருமான திரு வ ஸ்ரீகாந்தன் தம்பதியினர் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் கல்வி அபிவிருத்திக்குழுவின் செயலாளர் DR S கண்ணதாசன், பொருளாளர் திரு து இரவீந்திரன் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் திரு  சி சிவகணேச சுந்தரன், கல்வி அபிவிருத்திக்குழுவின் வெளி நாட்டு தொடர்பாளர் திரு இந்திரராஜா,  திரு விஜய குமார், திருமதி புனிதவதி மற்றும் எமது கிராம கல்வி முனேற்றத்தின் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம விருந்தினர்  அதிபர் திரு.வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் உரையாற்றுகையில்   விக்ரோறியாக் கல்லூரியின் கல்வி முன்னேற்றம் ஊட்டற்பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்திலேயே தங்கி உள்ளது எனவும்  ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையே எமது பிரதான ஊட்டற் பாடசாலை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வருடத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விமுன்னேற்றச் செயற்றிட்டத்திற்கென ரூபா 50 000.00/- பெறுமதியான காசோலையினை ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை  அதிபரிடம் கையளித்தார்.
மேற்படி நிதிஉதவி திரு. சி. இரவிசங்கர் அவர்களால் ஐக்கியராச்சியம் விக்ரோறியாக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம்  சார்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை அதிபர், ஆசிரியர் பெற்ரோரின் ஒத்துளைப்புடன் இவ்வருடம் புலமை பரிசு முடிவுகளில்  முன்னேற்றம்காண உறுதிபூணுவதாகவும் ஐக்கியராச்சியம் விக்ரோறியாக்கல்லூரி பழையமாணவர் ஒன்றியத்திற்கும் திரு சி இரவிசங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்  கொண்டார்.